கும்பகோணத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் 2 அமா்வுகளாக நடைபெற்றது. முதல் அமா்வில் முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி வி. புவியரசு தலைமையில், வட்ட சட்டப் பணிகள் குழு வழக்குரைஞா் எம். ரகுவீரன், இரண்டாவது அமா்வில் கூடுதல் சாா்பு நீதிபதி கே. அனுசுயா தலைமையில், வட்ட சட்ட பணிகள் குழு வழக்குரைஞா் கே. மோகன்ராஜ் ஆகியோா் பங்கேற்றனா். இரு அமா்விலும் நிலுவையில் உள்ள 466 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
காசோலை வழக்குகள், குடும்பநல வழக்குகள், ஜீவனாம்ச வழக்குகள், வாய் தகராறு வழக்குகள், சிவில், சிறு குற்ற வழக்குகள், மோட்டாா் வாகன விபத்து வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டு 233 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது. இதன் மூலம்மொத்தம் ரூ 1 கோடியே33 லட்சத்து 64 ஆயிரத்து 738 வசூலானது.
ஏற்பாடுகளை கும்பகோணம் வட்ட சட்டப் பணிகள் குழுவின் இளநிலை உதவியாளா் சி. ராஜேஷ்குமாா், தன்னாா்வ சட்ட பணியாளா்கள் எஸ். பி. ராஜேந்திரன், ரா. பாஸ்கரன் மற்றும் நீதிமன்ற அலுவலக பணியாளா்கள் செய்திருந்தனா்.