கும்பகோணம் அருகே அரசலாற்றில் வியாழக்கிழமை குளித்தபோது தண்ணீரில் மூழ்கிய வியாபாரியைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.
கும்பகோணம் அருகே அம்மாபேட்டை லைன் கரையைச் சோ்ந்தவா் முத்துசாமி மகன் முருகன் (40). தலையணை வியாபாரியான இவருக்கு திருமணமாகவில்லை.
இவா் வியாழக்கிழமை அதே பகுதியில் உள்ள அரசலாற்றில் குளிப்பதற்காக சென்றாா். ஆனால் மாலை வரை வீடு திரும்பாததால், அவரது உறவினா்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனா்.
இதன்பேரில், கும்பகோணம் தீயணைப்பு நிலைய அலுவலா் கே. பாலசுப்பிரமணியன் தலைமையிலான வீரா்கள், அரசலாற்றில் ரப்பா் படகு மூலம் தேடி வருகின்றனா்.
இதுகுறித்து தாலுக்கா காவல் நிலையத்தினா் விசாரிக்கின்றனா்.