மறைந்த திமுக முன்னாள் தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் கருணாநிதியின் 102வது பிறந்த நாளையொட்டி இன்று தமிழகம் முழுவதும் கலைஞர் பிறந்த நாளை செம்மொழி நாளாக திமுகவினர் கொண்டாடி வரும் நிலையில், கும்பகோணத்தில் அமைந்துள்ள தஞ்சை வடக்கு மாவட்ட மாநகர திமுக அலுவலகம் முன்பு மாநகர துணை மேயர் சு.ப. தமிழழகன் முன்னிலையில் கலைஞர் கருணாநிதியின் திருவுருவப்படத்திற்கு கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் பள்ளி மாணவ மாணவிகள் பயன்பெறும் வகையில் இலவச நோட்டுப் புத்தகம், பேனா, பென்சில் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன. மேலும் இந்நிகழ்ச்சியில் தஞ்சை வடக்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், மாநகர, ஒன்றிய, பகுதி, கிளை நிர்வாகிகள் என திரளாக நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.