சுவாமிமலை சாமிநாத சாமி கோவில் தொப்ப திருவிழா

77பார்த்தது
சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு தெப்பத் திருவிழா, ,




ஆறுபடை வீடுகளில் நான்காம் படை வீடாக விளங்கும் சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் நேற்றைய தினம் ஆடி கிருத்திகையை முன்னிட்டு கோயிலுக்குச் சொந்தமான நேத்திர புஷ்கரணி குளத்தில் தெப்பத் திருவிழா வெகு விமர்சையாக நடந்தது.
விழாவை முன்னிட்டு அதிகாலை நடை திறக்கப்பட்டு மூலவர் சுவாமிநாதசுவாமிக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. அதிகாலை முதல் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். தொடர் நிகழ்ச்சியாக இரவு தங்கமயில் வாகனத்தில் சுவாமி திருவீதியுலா வந்து வேத பாராயணம், தேவார பாராயணம் முழங்க மேளக்கச்சேரியுடன் திருக்கோயிலுக்கு சொந்தமான நேத்திர புஷ்கரணி குளத்தின் நாற்புறமும் ஆடி கிருத்திகை தெப்பம் மின்னொளி அலங்காரத்தில் மிளிர்ந்தது. திருமண பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் மோகனசுந்தரம், துணை ஆணையர் உமாதேவி மற்றும் திருக்கோயில் பணியாளர்கள், அர்ச்சகர்கள் செய்திருந்தனர். துப்புரவு பணிகளை சுவாமிமலை பேரூராட்சி தலைவர் வைஜெயந்தி சிவக்குமார், ஆலோசனையின் பேரில் பேரூராட்சி செயல் அலுவலர் சரவணவேல் மேற்பார்வையில் துப்புரவு பணியாளர்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை சுவாமிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் மலைச்சாமி மற்றும் போலீசார் செய்திருந்தார்கள்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி