உலக புகழ் பெற்ற சுவாமிமலை முருகன் கோவில் அருகே அமைந்துள்ள திருவலஞ்சுழியில் சீரடி சாய்பாபா கோவில் உள்ளது. இந்த கோவிலில் இன்று உத்ராயணம், வைகாசி மாதம் 22-ஆம் தேதி வியாழக்கிழமையில் இக்கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். இதையொட்டி (இன்று) சீரடி சாய்பாபாவுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து பழவகைகள், இனிப்புகள் மற்றும் மலர் அலங்காரம் செய்யப்பட்டு சாமிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் வியாழக்கிழமை தோறும் தொடர் அன்னதானம் வழங்கப்பட்டு வரும் நிலையில் இன்று 700-க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு தொடர் அன்னதானம் வழங்கப்பட்டது.