சுவாமிமலை முருகன் கோவிலில் வேல் பூஜை சிறப்பு வழிபாடு

73பார்த்தது
சுவாமிமலை முருகன் கோவிலில் வேல் பூஜை சிறப்பு வழிபாடு
மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டினை முன்னிட்டு சுவாமிமலை சுவாமிநாதர் ஆலயத்தில் வேல் பூஜை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. 

ஜூன் 9 - இந்து முன்னணி சார்பில் ஜூன் 22 ஆம் தேதி மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டினை முன்னிட்டு எவ்வித இடையூறும் இன்றி மாநாடு சிறப்பாக நடைபெற வேண்டி தமிழகத்தில் ஆறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான சுவாமிமலை சுவாமிநாதர் திருக்கோவிலில் இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம் தலைமையில் வேல் பூஜை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. 

இந்த வழிபாட்டு நிகழ்ச்சிக்கு, பாஜக மாவட்ட துணை தலைவர் ஏ. வேத செல்வம், மத்திய வழக்கறிஞர் பிரிவு தலைவர் சுரேஷ்குமார், முன்னாள் மாவட்ட தலைவர் சதீஷ்குமார், இந்து முன்னணி திருச்சி கோட்டத் தலைவர் கனகராஜ், கோட்ட பொதுச் செயலாளர் குணா, கோட்ட செயலாளர் ராஜசேகர், குடந்தை ஒன்றிய தலைவர் சமுதாயர், சாரல் சதிஷ்குமார், பாபநாசம் ஒன்றிய செயலாளர் சதிஷ், உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி