கும்பகோணம் கார்த்தி வித்யாலயா பள்ளியில் முன்னாள் குடியரசு தலைவர் A P J அப்துல் கலாம் அவர்களின் அவர் பிறந்த நாளினை முன்னிட்டு L. K. G வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகளின் அறிவியல் கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தும் அறிவியல் கண்காட்சி போட்டி நடைபெற்றது. இதில் மாணவ மாணவிகள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக சுரேஷ் கலந்துகொண்டு மாணவ மாணவிகளின் புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளை கண்டு வாழ்த்தினை தெரிவித்தார்கள். மாணவ மாணவியர்களுக்கு சிறப்பு வினாடி வினா நிகழ்ச்சியும் நடத்தப்பட்டு சிறப்பாக செயல்பட்ட மாணவ மாணவியர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது. சந்திரயான் 3 யினை கொண்டாடும் விதமாக மாணவர்கள் சந்திராயன் 3 னை போல் மாதிரியை உருவாக்கினார்கள்.
மாணவ மாணவியர்கள் தங்களின் அறிவியல் திறனை காட்சிப்படுத்தும் விதமாக அறிவியல் கண்காட்சி போட்டி நடைபெற்றது. இக்கண்காட்சியில் 1000 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் ஆர்வமாக பங்கேற்று தங்களது அறிவியல் கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தினார்.
இக்கண்காட்சியில் நடக்கும் இயந்திர ரோபோ மனிதன், தீயணைப்பு கருவி, நிலநடுக்க எச்சரிக்கை கருவி, கழிவு நீரோடைகளில் பூச்சிக்கொல்லி இல்லா கொசு ஒழிப்பு திட்டம், ட்ரோன், தானியங்கி தெரு விளக்கு, சூரிய ஒளியில் இயங்கும் மின்விளக்கு, உள்ளிட்ட பல்வேறு வகையான அறிவியல் கண்டுபிடிப்புகள் இடம்பெற்றன.