கும்பகோணம் அருகே ரவுடி கொலை

52பார்த்தது
கும்பகோணம் கும்பகோணம் அருகே திருவலஞ்சுழியில் ரவுடி கொலை

கும்பகோணம் சுவாமிமலை காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட திருவலஞ்சுழி கிராமத்தில் எம்ஜிஆர் நகரில் வசிப்பவர் காளி என்கிற காளிதாஸ் இவருக்கு வயது 36 இவர் கூலித் தொழிலாளி ஆவார் இவரது மனைவி இவரை விட்டு பிரிந்து வாழ்கின்றார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது. இவர் குடிபோதையில் எப்பொழுதும் இருந்து வருபவர் ஆவார். இந்நிலையில் இன்று காலை 7 மணி அளவில் இவர் தனது வீட்டு வாசலில் மல்லாந்த நிலையில் மண்டையில் லேசான காயத்துடன் இறந்து கிடந்தார். இவர் குடிபோதையில் கீழே விழுந்து இறந்து விட்டாரா அல்லது வேறு யாரும் தாக்கி இருக்க கூடுமா என்ற வகையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இறந்தவரது சடலம் கும்பகோணம் அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது. சாமி மலை காவல்துறையினர் தீவிர விசாரணை செய்து வருகிறார்கள் இவர் மீது பல்வேறு வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி