கும்பகோணத்தில் லாட்ஜ்கள், மசாஜ் சென்டர்கள், நகரத்தின் ஒதுக்குபுறமாக உள்ள குடியிருப்புகளில் பாலியல் தொழில் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கும்பகோணம் தாலுகா இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான ஆறு போலீசார் கொண்ட தனிப்படையினர் விசாரணையில் இறங்கினர். அப்போது, அன்னை அஞ்சுகம் நகரில் உள்ள ஒரு வீட்டில் ஐந்து பெண்கள் உறவினர்கள் எனக்கூறி, ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தனர். அவர்கள் 'ஆன்லைன்' வாயிலாக வாடிக்கையாளர்களை அழைத்து விபச்சாரம் செய்ததும் தெரிய வந்தது.
போலீசார், அவர்களிடம் நடத்திய விசாரணையில், திருபுவனத்தைச் சேர்ந்த லட்சுமி, 31, மற்றும் பவுண்டரிகபுரத்தைச் சேர்ந்த பிரேமி, 29, ஆகியோர் மூன்று இளம் பெண்களை வைத்து விபச்சாரத் தொழில ஈடுபட்ட வைத்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீஸார் லட்சுமி மற்றும் பிரேமி ஆகிய இரண்டு பேர் மீது வழக்கு பதிவு செய்து, அவர்களை கைது செய்து திருச்சி சிறையில் அடைத்தனர்.
மேலும் அவர்களுடன் இருந்த மூன்று பெண்களை மீட்டு, தஞ்சாவூரில் உள்ள பெண்கள் காப்பகத்தில் ஒப்படைத்தனர். அத்துடன் அவர்களிடம் இருந்து எட்டு மொபைல் போன்கள், இரண்டு டூ வீலர்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.