திருமணமாகவில்லையே என்ற ஏக்கத்தில் விஷம் குடித்த இரட்டை சகோதரிகள் மேலும் ஒருவர் உயிரிழப்பு
கும்பகோணத்தில், திருமணமாகவில்லையே என்ற ஏக்கத்தில் விஷம் குடித்த இரட்டை சகோதரிகளில் ஒருவர் உயிரிழந்தார் சிகிச்சை பெற்ற மற்றொருவரும் உயிரிழந்தார்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் காமாட்சி ஜோதிடர் தெருவில் வசிப்பவர் தியாகராஜன் (60), கூலித்தொழிலாளி. இவருக்கு பாமா (34), ருக்மணி (34) என்ற இரட்டையாக பிறந்த மகள்கள் உள்ளனர். 34 வயதாகியும் இன்னும் திருமணமாகவில்லையே என சகோதரிகள் இருவரும் வருத்தத்தில் இருந்தனர்.
இந்த நிலையில் ஆக. 30 இல் வீட்டில் யாரும் இல்லாத போது சகோதரிகள் விஷம் குடித்து மயங்கி கிடந்தனர். இதை பார்த்த உறவினர்கள் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இதில் திங்கள்கிழமை ருக்மணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். புகாரின் பேரில் கும்பகோணம் கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் சிவ செந்தில்குமார் வழக்கு பதிவு செய்து, உடற்கூறாய்வுக்கு ஒப்படைத்து விசாரணை நடத்தினார். மற்றொரு சகோதரி பாமா சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்தார். இந்த நிகழ்வு அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.