அம்மாபேட்டையில் இருந்து சென்னைக்கு புதிய பேருந்து வசதி

81பார்த்தது
அம்மாபேட்டையில் இருந்து சென்னைக்கு புதிய பேருந்து வசதி
அம்மாபேட்டை – சென்னை கிளாம்பாக்கம் புதிய வழித்தடத்தில் பேருந்து சேவை உயர்கல்வித்துறை அமைச்சர் கோவை. செழியன் தொழிலாளர் நலன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி. கணேசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, போக்குவரத்துத்துறை அமைச்சர் வழிகாட்டுதலின்படியும், அம்மாபேட்டை - சென்னை கிளாம்பாக்கம் புதிய வழித்தடத்தில் பேருந்து சேவையினை உயர்கல்வித்துறை அமைச்சர் கோவை. செழியன் தொழிலாளர் நலன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி. கணேசன் ஆகியோர் நேற்று தொடங்கி வைத்தனர். 

தஞ்சாவூர் அம்மாபேட்டையிலிருந்து இரவு 10.00 மணிக்கு நடை எடுத்து சாலியமங்கலம், பாபநாசம், கும்பகோணம் வழியாக சென்னை கிளாம்பாக்கத்திற்கு புதிய வழித்தடப் பேருந்தினை, நேற்று கும்பகோணம் பழைய நகராட்சி அலுவலக வளாகத்திலிருந்து அமைச்சர் பெருமக்கள் தொடங்கி வைத்தார்கள். இந்நிகழ்ச்சிக்கு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் திருமதி. பிரியங்கா பங்கஜம் மாநிலங்களவை உறுப்பினர் திரு. சு. கல்யாணசுந்தரம் முன்னிலை வகித்தார்கள். இந்நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினர் திரு. மு. சண்முகம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. செ. இராமலிங்கம், கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் திரு. கே. அன்பழகன், திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் திரு. துரை. சந்திரசேகரன், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குநர் திரு. இரா. பொன்முடி,
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி