பள்ளியில்50 ஆண்டுகளுக்கு முன்பு படித்த மாணவர்கள் சந்திப்பு
By A. Madhankumar 55பார்த்ததுகும்பகோணம் நகர மேல்நிலைப் பள்ளியில்50 ஆண்டுகளுக்கு முன்பு படித்த மாணவர்கள் சந்திப்பு
கும்பகோணம் நகர மேல்நிலைப் பள்ளியில்
1973- 74-ம் ஆண்டு 10-ம் வகுப்பு படித்த மாணவ,
மாணவிகளின் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
பள்ளித் தலைமையாசிரியர் பாலசுப்பிரமணியன்
தலைமை வகித்தார். இதில், 50 ஆண்டுகளுக்கு முன்பு
அந்தப் பள்ளியில் படித்த மாணவ, மாணவிகள் நேற்று
சந்தித்து, தாங்கள் படித்த வகுப்பறையில் அமர்ந்து
பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர்.
பின்னர், அந்த பள்ளி வளாகத்தில் உள்ள கணித
மேதை ராமானுஜன் சிலைக்கு மாலை அணிவித்தனர்.
தொடர்ந்து, முன்னாள் தலைமையாசிரியர்
ஆர். விஸ்வநாதன் மற்றும் பள்ளி ஆசிரியர்களை
கவுரவித்தனர்.
இதில் நடிகர் தியாகு, இயக்குநர் அரவிந்த்ராஜ்
உட்பட வெளிநாடு, மாநில, மாவட்டங்களில் இருந்து
50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை முன்னாள் மாணவர்கள்
சங்கத் தலைவர் நெடுஞ்செழியன், செயலாளர்
சிவக்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.