கோரிக்கை முன்வைத்து போராட்டம் மருத்துவ ஊழியர்கள் கைது

69பார்த்தது
கோரிக்கை முன்வைத்து போராட்டம் மருத்துவ ஊழியர்கள் கைது
தமிழ்நாடு அரசு அறிவிக்கப்பட்ட மக்களை தேடி மருத்துவம் ஊழியர்கள் ஏராளமானோர் பணியாற்றி வருகின்றனர் இந்நிலையில் அவர்களின் பிரதான கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் ஜூலை 30 காத்திருப்புப் போராட்டத்தை அறிவித்து தஞ்சை மாவட்டத்திலிருந்து ஏராளமான மக்களை தேடி மருத்துவ ஊழியர்கள் வேனில் சென்னைக்கு பயணம் செய்தனர்

அப்போது கும்பகோணம் அருகே உள்ள சோழபுரத்தில் சோழபுரம் காவல்துறையினர் தடுத்து நிறுத்தி நள்ளிரவு 11 மணிக்கு தனியார் மண்டபத்தில் அடைத்தனர் அப்போது பெண்கள் என்று பாராமல் சோழபுரம் காவல்துறை நிலையத்தை சேர்ந்த ஜெயக்குமார் என்பவர் ஊழியர்களை அவமறியதாக பேசி போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் பேசியுள்ளார்.

தகவல் அறிந்து சிஐடியு மாநில செயலாளர் ஜெயபால் திருவிடைமருதூர் தெற்கு ஒன்றிய செயலாளர் பழனிவேல் ஒன்றிய குழு உறுப்பினர் ரங்கசாமி ஆகியோர் நள்ளிரவில் ஊழியர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர் இருப்பினும் பெண் காவலர்களை இல்லாமல் அடைத்து வைத்திருப்பதையும் காவலர் ஜெயக்குமார் அவதூறாக பேசியதை கண்டிக்கிறோம் என சாலை மறியலில் ஈடுபட்டனர் அப்போது திருவிடைமருதூர் டிஎஸ்பி சம்பந்தப்பட்ட காவலர் ஜெயக்குமாரை ஆயுதப் படைக்கு பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டார்

தொடர்புடைய செய்தி