கந்தர்வகோட்டையை அடுத்த பெரியகோட்டையை சேர்ந்தவர் சசிகலா. ஊராட்சி தலைவராக உள்ளார்.இவரது கணவர் முருகேசன் கத்தார் நாட்டில் தொழிலாளியாக
வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், கடந்த ஜூன் 24ம்தேதி அங்கு உயிரிழந்தார்.
இறந்த தனது கணவரின் உடலை மதிமுக எம்.பி.துறை வைக்கோவின் முறியற்சியில் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது. அதன்படி விமானம் மூலம் உடல் நேற்று முன்தினம் சென்னை வந்தது. குவைத் நாட்டை சேர்ந்த இந்திய வம்சா வளியினரான சமூக ஆர்வலர் மதி உதவியால் சென்னையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் முருகேசன் உடல் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.