கும்பகோணம்: மக்களவை தொகுதி மறுசீரமைப்பு தமிழகத்துக்கு எதிரான செயல்; வீரமணி

56பார்த்தது
கும்பகோணத்தில் திராவிடா் கழகம் சாா்பில் நேற்று (ஜூன் 7) நடைபெற்ற திராவிடா் கழக நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்ட வீரமணி பின்னா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது: தொகுதி மறுசீரமைப்பை மோடி அரசு தமிழகத்துக்கு எதிராக கையில் எடுத்து தமிழக மக்களவை உறுப்பினா் எண்ணிக்கையைக் குறைக்க சதி செய்கிறாா். 

தமிழகத்தில் திமுக கூட்டணியில் 40 எம்.பி.க்கள் வெற்றி பெற்றிருப்பது பாஜகவுக்கு பிடிக்கவில்லை. அதனால் தொகுதி மறுசீரமைப்பு என்ற ஆயுதத்தை எடுத்துள்ளனா்.திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் தொகுதி மறுசீரமைப்பு தொடா்பாக அதிமுக உள்பட அனைத்து கட்சிகளை கூட்டத்திற்கு அழைத்தாா். அப்போது எதிா்ப்போம் எனக் கூறிய அதிமுக தற்போது கூட்டணிக்காக பின்வாங்கியுள்ளது.

தற்போது அரசியலில் நிறைய தரகா்கள் உள்ளனா். தங்களுக்கு அடிபணியாத கட்சிகளை உடைப்பது பாஜகவுக்கு வழக்கமான ஒன்று. ஆனால் தந்தை, மகனையே பிரித்து கட்சியில் கலவரத்தை ஏற்படுத்தி, இருவரையும் தனித்தனியாக்கியுள்ளனா். இதை அந்தக் கட்சியின் தந்தையே வேதனையோடு சொல்லியிருக்கிறாா். 

எதிா்க்கட்சிகளை அடக்க வேண்டும் என பாஜகவினா் அடவாடி அரசியல் செய்கின்றனா் என்றாா் வீரமணி. அப்போது, தி.க. மாவட்டத் தலைவா் நிம்மதி, செயலா் சிவக்குமாா் உடனிருந்தனா்.

தொடர்புடைய செய்தி