கும்பகோணம்: விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

82பார்த்தது
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தெற்கு ஒன்றியம் மாடாக்குடியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நேற்று தில்லையம்பூர் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தஞ்சாவூர் வடக்கு மாவட்ட செயலர் க. செ. முல்லைவளவன் தலைமை வகித்தார், தெற்கு ஒன்றிய செயலர் தென்னவன் முன்னிலை வகித்தார். 

மாநில துணைச்செயலர் வழக்குறைஞர் எம். செந்தில்குமார் வரவேற்று பேசினார். ஆர்ப்பாட்டத்தில் தில்லையம்பூர் ஊராட்சியில் உள்ள மகாகாளியம்மன் கோயில் குளம் சுற்றுச்சுவர் இல்லாமல் இனியவன் (3) வயது சிறுவன் உயிரிழந்ததால் குளத்தை பராமரிப்பு இல்லாமல் வைத்திருந்த ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து வழக்கறிஞர்கள் சங்க மண்டலத்தலைவர் சா. விவேகானந்தன், கொள்கை பரப்பு துணைச்செயலர் செ. அரசாங்கம், மாநகர மாவட்ட செயலர் சா.கோ. ராஜ்குமார், கோவி. பகத்சிங் உள்ளிட்டோர் பேசி இறந்த சிறுவன் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று பேசினர். எஸ். வசந்த் நன்றி கூறினார். ஏராளமான கட்சியினர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி