தமிழக வெற்றிக் கழகம் தளபதி விஜய் ஆணைக்கிணங்க மற்றும் பொதுச் செயலாளர் ஆனந்த் வழிகாட்டுதலின்படி இன்று (ஏப்ரல் 16) கும்பகோணம் அருகே உள்ள ஊராட்சி சௌதாம்பிகா நகர் அரசு தொடக்கப்பள்ளியில் தமிழக வெற்றிக்கழகம் தஞ்சை கிழக்கு மாவட்ட மாநகர மகளிர் அணி சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு உடல்நிலை மேம்படுத்தும் விதமாக ஊட்டச்சத்து உணவு பொருட்கள் அடங்கிய பெட்டகத்தை நலத்திட்ட உதவியாக வழங்கப்பட்டது.
இதில் உலர் திராட்சை, பேரிச்சம்பழம், பாதாம், பிஸ்தா, முந்திரி அடங்கிய பெட்டகத்தை தஞ்சை கிழக்கு மாவட்ட செயலாளர் வினோத் ரவி தலைமையில் மாவட்ட மகளிர் அணி தலைவி திருமதி அஞ்சனா பாலாஜி முன்னிலையில் மாநகரம் மகளிர் அணி தலைவி திவ்யலட்சுமி வழங்கினார். இந்நிகழ்வில் மாநகர செயலாளர் வீரா விஜயகுமார் உட்பட தஞ்சை கிழக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், மாநகர செயற்குழு உறுப்பினர்கள், மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் என 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.