சரிவர பணியாற்றாத போக்குவரத்துக் கழக பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மற்றும் பணியிட மாறுதல்
மேலாண் இயக்குனர் திரு. கே. எஸ். மகேந்திரகுமார் அவர்கள் நடவடிக்கை
------
கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழகம், தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில் 02-07-2024 இன்று காலை தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரிக்கு செல்வதற்கு சரியான நேரத்தில் பேருந்தை இயக்காமலும், பயணிகளிடம் சரியான முறையில் பதில் அளிக்காமல் இருந்த நடத்துனர் திரு. A. யேசுதாஸ் மற்றும் பேருந்து நிலைய நேரக்காப்பாளர் திரு. A. ராஜா ஆகிய இருவர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை மற்றும் பணிமாறுதல் செய்து மேலாண் இயக்குனர் திரு. கே. எஸ். மகேந்திரகுமார் அவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளார்.
02-07-2024 இன்று தஞ்சாவூர் நகர்-1 கிளை தடப்பேருந்து எண். A63 –ன் நடத்துனர் திரு. A. யேசுதாஸ் பணியில் காலை 7. 00மணிக்கு 10 நிமிடம் தாமதமாக மருத்துவக்கல்லூரி வழியாக தச்சன் குறிச்சி செல்வதற்கு பேருந்தை இயக்கியுள்ளார்.
பேருந்து தாமதமாக வந்த காரணத்தால் மருத்துவக்கல்லூரிக்கு பணிக்கு செல்லக்கூடிய தூய்மை பணியாளர்கள் பேருந்து தாமதமாக வருவதாகவும், இரயிலடி வழியாக செல்வதால் தாங்கள் பணிக்கு சீக்கிரம் செல்ல முடியவில்லை என்றும், சரியான நேரத்திற்கு பேருந்தை இயக்குவதற்கு பழைய பேருந்து நிலைய நேரங்காப்பாளர் திரு. A. ராஜா–விடம் முறையிட்டுள்ளனர்.