கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் திருக்கோவில் எதிரே உள்ள பூக்கடை வீதியில் கும்பேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான தேரடி வருண விநாயகர் ஆலயம் உள்ளது. இக்கோவில் அருகில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் ஸ்ரீ அனுமன் கோவில்களில் சனிக்கிழமைகளில் நடைபெறும் சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொள்வது வழக்கம். இதையொட்டி ஏராளமான பக்தர்கள் அனுமனுக்கு உகந்த சனிக்கிழமையான ஜூன் 7 (இன்று) நீண்ட வரிசையில் பொதுசாலையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். இதனால் சனிக்கிழமைகளில் மட்டும் பூக்கடை வீதியில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் நடந்துசெல்ல வழி இல்லாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வழக்கமான நிகழ்வாகவுள்ளது.