கும்பகோணம்: ராம நவமியை முன்னிட்டு தங்க பல்லக்கில் ஸ்ரீ ராமர் வீதி உலா

59பார்த்தது
கும்பகோணம்: ராம நவமியை முன்னிட்டு தங்க பல்லக்கில் ஸ்ரீ ராமர் வீதி உலா
கும்பகோணத்தில் இன்று பங்குனி மாதம் 18ஆம் தேதி ராமநவமி நான்காம் நாள் திருவிழாவை முன்னிட்டு அருள்மிகு ராமசாமி உற்சவவர் மேளதாளங்கள் முழங்க ரத யாத்திரையாக தங்க பல்லக்கில் திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் தங்க பல்லக்கு ரத யாத்திரை பூக்கடை தெரு வழியாக சென்று பெரிய கடை தெரு, சாரங்கபாணி கோவில், மற்றும் உச்சி பிள்ளையார் கோவில் வழியாக கல்லங்குடி தெரு, ராமசாமி கோவில் மடவளாகம், புதுப்பாளையத்தெரு வழியாக கவரை தெரு வரை சென்று பக்தர்களுக்கு ஆசி வழங்கிவிட்டு மீண்டும் ராமசாமி ஆலயத்திற்கு சுவாமி எழுந்தருளினார். 

மேலும் இந்நிகழ்ச்சிக்கு உபயதாரர்கள் கோயம்புத்தூர் திரு தசரதராமன், ஓலைசப்பரம் வழங்கியுள்ளார். மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் டி. ஆறாமுத ஐயங்கார் சுவாமிகள் குடும்பத்தினர், எம்.எஸ். நாடார் பிரஸ், கும்பகோணம் ஸ்ரீராம் சைக்கிள் ட்ரேடர்ஸ், கும்பகோணம் திரு. ரங்கநாதன் மற்றும் பெருமாள் சாமி குடும்பத்தினர் இன்றைய நிகழ்ச்சிக்கு உபயம் வழங்கியுள்ளனர். தொடர்ந்து ராஜேந்திரன், அருண்குமார், திருக்கோவில் பட்டார் சௌந்தர்ராஜன், மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் கவரை தெருவாசிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி