கும்பகோணம் உதவி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்கொடுமை தடுப்பு பிரிவின் ஐ.ஜி. ஏ. கயல்விழி தலைமையில், தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர்களுடன் ஆலோசனை நடைபெற்றது. இதில், போக்சோ வழக்குகளை விரைவாக தீர்ப்பதற்காக உறுதியான ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களை கோர்ட்டில் சமர்ப்பிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். இது வழக்குகளின் தீர்வை துரிதப்படுத்தும் என்றார்.