கும்பகோணம் பாணாதுறையில் விஜயன் ஆர்ச்சரி அகடாமி சார்பில் மறைந்த கராத்தே வீரர் ஷிஹான் ஹுசைனி திருவுருவ படத்திற்கு தேசிய வில் வித்தை பயிற்சியாளர் என், விஜயபாலன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒன்றிணைந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் அனைவரும் ஐந்து நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து நிகழ்ச்சியில் மூத்த பயிற்சியாளர்கள் வசந்த், விஜயகுமார், சரண், சரத், யோகலெட்ச்சுமி, சத்தியா, மற்றும் பயிற்சி சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செய்தனர்.