கும்பகோணம்: ஜாமினில் வெளியே வந்த பிரபல ரவுடி வெட்டிக் கொலை

73பார்த்தது
கும்பகோணம்: ஜாமினில் வெளியே வந்த பிரபல ரவுடி வெட்டிக் கொலை
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் சுவாமிமலை அருகே பிரபல ரவுடி காளிதாஸ் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். திருவலஞ்சுழி பகுதியில், ஜாமினில் வெளியே வந்த பிரபல ரவுடி காளிதாஸ், வீட்டு வாசலில் வைத்து படுகொலை செய்யப்பட்டுள்ளார். இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், காளிதாசின் சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். கடந்த சில நாட்களாக ரவுடிகள் கொலை செய்யப்படுவது தொடர்கிறது.

தொடர்புடைய செய்தி