கும்பகோணம் உச்சிப்பிள்ளையார் கோவில் அருகில் தஞ்சாவூர் வடக்கு மாவட்டம் கும்பகோணம் மாநகரம் திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் மாநிலங்களவை உறுப்பினர் சு. கல்யாணசுந்தரம், கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க. அன்பழகன் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு நீர்மோர், தர்பூசணி வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை மேயர், மாநகர செயலாளர் சுப. தமிழழகன், கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜெ. சுதாகர் அவர்கள், அவை தலைவர் வாசுதேவன், செயற்குழு உறுப்பினர் குட்டி தெட்சிணாமூர்த்தி, பகுதி செயலாளர்கள் கண்ணன், இரா. கல்யாணசுந்தரம், கிருஷ்ணமூர்த்தி, மண்டல குழு தலைவர்கள் இரா. அசோக்குமார், பாபு. நரசிம்மன், ஆசைத்தம்பி, குவைத் ஸ்ரீதர், மாமன்ற உறுப்பினர்கள், மாநகர கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.