இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா சார்பில் 18ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு நேற்று பாலக்கரையில் விநாயகர் சிலை முன்பு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மெகா அன்னதான திட்டத்தை கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க. அன்பழகன் அவர்கள் துவங்கி வைத்தார்கள். அருகில் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜெ சுதாகர் அவர்கள், பெரும்பாண்டி ஊராட்சி மன்ற தலைவர் ஆர் கே பாஸ்கர் அவர்கள், மாநில முதன்மை பொதுச் செயலாளர் கா பாலா தலைமையில் இந்து மக்கள் கட்சி இளைஞர் அணி மாநில செயலாளர் கார்த்திக்ராவ் சிவசேனா மாநில அமைப்பாளர் வேல்முருகன் இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா மாநகர தலைவர் பிரபாகரன் மற்றும் நிர்வாகிகள் சங்கர் மகேஷ் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.