கும்பகோணம் அருகே வீடு புகுந்து நகைகள் திருட்டு

79பார்த்தது
கும்பகோணம் அருகே வீடு புகுந்து நகைகள் திருட்டு
கும்பகோணம் அருகே சாக்கோட்டை, பெரியார் நகரைச் சேர்ந்தவர் திலீபன் (35). மினி சரக்கு லாரி டிரைவர். கடந்த 31ம் தேதி திலீபன் குடும்பத்துடன் அருகில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார். மறுநாள் 1ம் தேதி வீடு திரும்பியபோது, வீட்டின் பின் கதவு உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த 11 பவுன் தங்க நகைகள் திருட்டுப் போனது தெரிய வந்தது. புகாரின் பேரில் பட்டீஸ்வரம் போலீசார் வழக்குபதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி