கும்பகோணம்: இந்து மக்கள் கட்சி பிரமுகர் குருமூர்த்தி கைது

76பார்த்தது
கும்பகோணம்: இந்து மக்கள் கட்சி பிரமுகர் குருமூர்த்தி கைது
கும்பகோணம் அரசு மருத்துவமனையில் பைபிளை குப்பைத்தொட்டியில் வீசிய இந்து மக்கள் கட்சி பிரமுகர் குருமூர்த்தி கைது செய்யப்பட்டார். 

கும்பகோணம் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் நோயாளிகள் மற்றும் பொதுமக்களுக்கு கிறிஸ்தவ பெண் பைபிள் புத்தகங்களை வழங்குவதற்காக எடுத்துச் சென்றுள்ளார். இந்த தகவல் இந்து மக்கள் கட்சி மாநில பொதுச் செயலாளர் குருமூர்த்தி நோயாளிகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட பைபிள்களை வாங்கி மருத்துவமனை வளாகத்தில் உள்ள குப்பைத் தொட்டியில் வீசினார். மேலும் மருத்துவமனை அதிகாரியிடம் இது பற்றி புகார் அளித்துள்ளார்.

மேலும் அரசு மருத்துவமனை குப்பைத் தொட்டியில் பைபிள்களை வீசிய தகவல் காவல்துறைக்கு தெரிந்தவுடன் கும்பகோணம் கிழக்கு போலீசார் குருமூர்த்தியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கும்பகோணம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது

தொடர்புடைய செய்தி