கும்பகோணத்தில் டிடிவி தினகரன் பேட்டி

63பார்த்தது
கும்பகோணத்தில் தஞ்சை வடக்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பாசறை இணைச் செயலாளர் கௌதம் மற்றும் மணமகள் மாலினி ஆகியோரின் திருமணம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தஞ்சை வடக்கு மாவட்ட கழக செயலாளரும் கழகத் துணை பொதுச் செயலாளர் ஆன எம் ரங்கசாமி தலைமையில் நேற்று நடைபெற்ற திருமண விழாவில்

சிறப்பு விருந்தினராக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டி டி வி தினகரன் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகளும் அதிமுக ஓபிஎஸ் அணி நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள் அதன் பிறகு செய்தியாளருக்கு அளித்த பேட்டியின் விவரம் பின்வருமாறு

முன்னாள் அமைச்சர்கள் அதிமுகவை ஒருங்கிணைக்கிறார்களா என்று தெரியவில்லை எல்லாருமே ஜெயலலிதாவின் தொண்டர்கள் அவர்கள்தான் அதிமுகவை ஒருங்கிணைய வேண்டும்.

திமுக ஆட்சியில் ஸ்டாலின் குடும்பத்தினரை தவிர வேறு யாருக்கும் பாதுகாப்பில்லை, தமிழகத்தில் நாள்தோறும் நடக்கும் கொலைகளை செய்பவர்கள் 20 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் தான் காரணம் கஞ்சா கலாச்ஞாரமாக மாறிவிட்டது வேலைவாய்ப்பு இல்லை. அதனால் கூலிப்படையாக செயல்படுகிறார்கள்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி