கும்பகோணம் மாநகராட்சி கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது, மேயா் க. சரவணன் எழுந்து அறைக்கு செல்ல முயன்றாா். அப்போது நெஞ்சு வலிப்பதாக கூறி கீழே விழுந்தாா். இதனால் கூட்டம் பாதியில் நின்றது. இதைத் தொடா்ந்து, திங்கள்கிழமை இரவு நெஞ்சு வலிப்பதாக கூறி மேயா் சரவணன் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சோ்ந்தாா்.
இதேபோல், மாநகராட்சி பொது சுகாதாரக் குழு தலைவரும் மாமன்ற உறுப்பினருமான குட்டி (எ) இரா. தட்சிணாமூா்த்தி கும்பகோணத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்ந்தாா்.
அங்கு விசாரணைக்கு வந்த கிழக்கு காவல் நிலைய போலீஸாரிடம்,
திங்கள்கிழமை மாமன்ற கூட்டம் நடைபெற்றபோது, மேயா் தன்னை தாக்கியதாகவும், அவா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகாா் அளித்தாா்.
போலீஸாரிடம் கேட்டபோது, மேயரிடம் விசாரித்தோம். அவா் புகாா் ஏதும் தரவில்லை என்றனா்.