கும்பகோணத்தில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
விண்ணை தொடும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய மத்திய மாநில அரசுகளை கண்டித்து, இன்று கும்பகோணம் காந்தி பூங்கா முன்பு தமிழக வெற்றிக்கழக தஞ்சை கிழக்கு மாவட்ட செயலாளர் வினோத் ரவி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட இணை செயலாளர் எஸ் பிரபாகரன் மாநகர செயலாளர் வீரா விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வைத்தனர் இந்த போராட்டத்தில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டு மத்திய மாநில அரசுகளை கண்டித்து கோஷங்களை எழுப்பினர் இதனால் சிறிது நேரம் காந்தி பூங்கா பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது