சென்னை என்ஜினீயரிங் மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்து கும்பகோணம் அரசு ஆண்கள் கல்லூரி முன்பு இளைஞர் அரண் மற்றும் மாணவர் அரண் சார்பில் மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு கல்லூரி மாணவர் அரண் தலைவர் எஸ். சாபின்ராஜ் தலைமை தாங்கினார். இதில் இளைஞர் அரண் செயலாளர் கார்த்தி, ஊடக பிரிவு நிர்வாகி தனுஷ் மற்றும் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு சென்னை என்ஜினீயரிங் மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்தும், பெண்கள் மீதான பாலியல் குற்றத்தை தடுக்கும் வகையில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர்.