தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம், ஆண்டாங்கோயில் சாந்தவெளி ஆஞ்சநேயர் கோவில் வெள்ளிக்கிழமை இரவு பெய்த மழையில் இடி விழுந்து ஆலமரம் தீப்பிடித்து எரிந்தது. இதனையடுத்து, அருகே இருந்தவர்கள் கொடுத்த தகவலின் பேரில், வலங்கைமான் தீயணைப்புத்துறையினர் வந்து தீயை அணைத்தனர்.