சாலை விபத்தில் அரியலூர் விவசாயி பலி

66பார்த்தது
சாலை விபத்தில் அரியலூர் விவசாயி பலி
அரியலூர் மாவட்டம் ஆயிபாளையம் அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் சங்கர்(வயது 50). இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு ஊருக்கு திரும்பிய இவர் ஊரில் விவசாய வேலை பார்த்து வந்தார். இவர் தனது உறவினர் மகேஷ்(29) என்பருடன் செல்போன் பழுது நீக்குவதற்காக தனது மோட்டார் சைக்கிளில் கும்பகோணத்திற்கு வந்தார்.


செல்போன் பழுது நீக்கி விட்டு சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர். ஜெயங்கொண்டம் சாலை போக்குவரத்து அதிகம் இருக்கும் என்பதால் செட்டிமண்டபம் புறவழிசாலை, சோழபுரம் வழியாக அரியலூர் செல்லலாம் என முடிவு செய்து மாவட்ட தலைமை ஆஸ்பத்திரி வழியாக வந்து கொண்டிருந்தனர்.

டாக்டர் மூர்த்தி சாலை அருகே வந்த போது எதிரில் வந்த லாரி மீது மோட்டார் சைக்கிள் பயங்கரமாக மோதியது. இதில் படுகாயம் அடைந்த சங்கர் மற்றும் மகேஷ் ஆகிய 2 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு கும்பகோணம் மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் சங்கர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மகேஷ் தீவிர சிகிச்சை பிரிவில சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து கும்பகோணம் கிழக்குபோலீஸ் இன்ஸ்பெக்டர். சிவ செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

தொடர்புடைய செய்தி