கும்பகோணத்தில் அந்தணர் பாதுகாப்பு பேரணி மாநாடு இந்து மக்கள் கட்சி மாநில பொதுச் செயலாளர் குருமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. ஸ்ரீஸ்ரீஸ்ரீ ராமபிரேமிக குலசேகர ராமானுஜ ஜீயர் ஆசியுரை வழங்கினார். இந்து மக்கள் கட்சி நிறுவன தலைவர் அர்ஜுன் சம்பத் சிறப்புரையாற்றினார். இந்த மாநாட்டில் ஸ்ரீ பாலாஜி குழுமம் பாலாஜி, நாராயணி நிதி நிறுவனர் கார்த்திகேயன், தமிழ் சேவா சங்கம் நிறுவனர் ஞானசரவணவேல், ஆடுதுறை பேரூராட்சி தலைவர் ஸ்டாலின், அகில இந்திய முக்குலத்தோர் பாசறை நிறுவனத் தலைவர் சிற்றரசு, புரட்சி தமிழகம் மாநில தலைவர் மூர்த்தி, அதிமுக மாநகரச் செயலாளர் ராமநாதன், தமாகா மாவட்ட தலைவர் சங்கர், தமிழ்நாடு பிராமணர் சமாஜம் நிறுவனத் தலைவர் ஹரிஹர முத்து ஐயர், தமிழ்நாடு அர்ச்சகர்கள் சமூக நல மாநில பொதுச்செயலாளர் பாலசடாட்சரம், திரைப்பட நடிகை கஸ்தூரி, திரைப்பட இயக்குனர் மோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு அர்ச்சகர்கள் சமூக நல சங்க மாநில இணை செயலாளர் பாலஉமாசுதன் நன்றி கூறினார்.