கும்பகோணம் மறை மாவட்ட ஆயர் இல்லத்தில் கிறிஸ்துமஸ் பெருவிழா மதநல்லிணக்க, சமூக நல்லிணக்க பெருவிழாவாக அனைத்து மதத்தினரும் இணைந்து பங்கேற்கும் விழாவாக கொண்டாடப்பட்டது. இதில் கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்த 500க்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்கள் கும்பகோணத்தின் முக்கிய வீதிகள் வழியாக அலங்கார ஊர்திகளுடன் பேரணியாக சென்று அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
விழாவில் மறைமாவட்ட ஆயர் ஜீவானந்தம் பேசும்போது இன்றைக்கு குழந்தைகளுக்கு பள்ளிகூடம் மட்டுமல்ல குடும்பத்திலேயே பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது என வேதனையோடு குறிப்பிட்டு இந்த நிலை மாற வேண்டும் அதற்காக நாம் அனைவரும் பாடுபட உறுதி ஏற்க வேண்டும். நாடுகளிடையே போர் மற்றும் குழப்பங்கள் விலக வேண்டும், அமைதி நிலவ வேண்டும், அதற்காக நாம் அனைவரும் பாடுபட உறுதி ஏற்போம் என்றும் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.
மேற்கண்டவாறு கும்பகோணம் மறைமாவட்ட ஆயர் ஜீவானந்தம் பேசினார். இந்த நிகழ்ச்சியில் கும்பகோணம் மாநகர துணை மேயர் தமிழழகன், மயிலாடுதுறை முன்னாள் எம்பி ராமலிங்கம், கும்பகோணம் அதிமுக மாநகர செயலாளர் ராம ராமநாதன், அன்பு மருத்துவமனை நிர்வாக இயக்குனர் வழக்கறிஞர் கரிகாலன், முன்னாள் கவுன்சிலர்கள் ஜான் கொய்யா, கோவிந்தராஜ், கிறிஸ்தவ பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து உள்ளனர்.