தஞ்சாவூரில் பச்சையப்பன் கல்லூரி தமிழ்த் துறை முன்னாள் தலைவர், முனைவர் வா. மு. சே. முத்துராமலிங்க ஆண்டவர் தொகுத்த 'கலைஞர் ஒரு முத்தமிழ் பல்கலைக்கழகம்' நூல் வெளியீடு நேற்று நடைபெற்றது. உயர்கல்வித் துறை அமைச்சர் கோவில் செழியன், தஞ்சை எம்.எல்.ஏ நீலமேகம் மற்றும் திருவையாறு எம்.எல்.ஏ துரை சந்திரசேகரன் ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.