இந்திய கிரிக்கெட் அணி இந்த மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதலாவது டெஸ்ட் போட்டி ஜூன் 20ஆம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில், பும்ரா குறித்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் கூறுகையில், “இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில், எந்த 3 போட்டிகளில் பும்ரா விளையாடுவார் என நாங்கள் இன்னும் முடிவெடுக்கவில்லை. ஆட்டத்தின் போக்கை பொறுத்தே அது குறித்து முடிவெடுக்கப்படும்” என்றார்.