ஹமாஸின் தாக்குதலில் இதுவரை 300-க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். காசாவில் இருந்து இஸ்ரேலிய பகுதிகளுக்குள் ஊடுருவிய பயங்கரவாதிகள் உள்ளூர் குடிமக்களை பிணைக் கைதிகளாக பிடித்து வருகின்றனர். தற்போது, ஹமாஸ் பயங்கரவாதிகளால் இளம்பெண் ஒருவர் கடத்தப்பட்டார். நோவா அர்கமணி (25) என்ற இளம்பெண் கடத்தப்பட்டு மோட்டார் சைக்கிளில் தூக்கிச் செல்லப்பட்டார். அந்த இளம்பெண் என்னைக் கொல்ல வேண்டாம் என்று கெஞ்சியும் அவர்கள் விடவில்லை. இது தொடர்பான வீடியோ வைரலாக பரவி வருகிறது.