மகாராஷ்டிர மாநிலம் நாசிக்-புனே நெடுஞ்சாலையில் இன்று (ஜன., 17) அதி பயங்கர சாலை விபத்து நடந்தது. அதிவேகமாக வந்த லாரி, பயணிகளுடன் சென்ற மேக்சிமோ வேன் மீது பின்னால் மோதிய நிலையில், முன்னால் சென்ற பேருந்து மீது மேக்சிமோ வேன் மோதியது. இந்த விபத்தில் 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் மேக்சிமோ அப்பளம் போல் நொறுங்கியது.