மகாராஷ்டிராவில் இன்று (ஏப்., 02) காலை பயங்கர சாலை விபத்து நடந்தது. புல்தானா மாவட்டத்தில் உள்ள காங்கான்-ஷேகான் நெடுஞ்சாலையில் 2 ஆம்னி பேருந்துகளும், ஒரு பொலேரோவும் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டன. இந்த விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.