மதுரை சோழவந்தானில் தொழிலாளி ஒருவர் மதுபோதையில் கத்தியால் குத்தியதில் சிறுவன் உயிரிழந்தார். முத்துசாமி, மனைவி தவமணி, பேரன் மிதுன் ஆகியோர் வீட்டில் இருந்துள்ளனர். பக்கத்துவீட்டுக்காரரான அய்யனார், முத்துசாமியின் வீட்டிற்குள் புகுந்து கத்தியால் குத்தியுள்ளார். சிறுவன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். அய்யனாரின் மனைவி, முத்துசாமி மகன் விவேக்குடன் ஓடிப்போனதால் ஆத்திரமடைந்து இக்கொடூரத்தை செய்துள்ளார்.