டெல்லி: இன்று (ஜூன். 10) காலை 10 மணியளவில் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. 7வது மற்றும் 8வது மாடியில் தீப்பற்றி எரிந்தது. விபத்தில் இருந்து தப்பிக்க மாடியில் இருந்து கீழே குதித்த யாதவ் (35) மற்றும் அவரின் 2 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். யாதவின் மனைவி மற்றும் மற்றொரு மகன் உயிர் தப்பினர். சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் குடியிருப்பில் சிக்கியவர்களை தொடர்ந்து மீட்கின்றனர்.