வாழைகளை சேதம் செய்த காட்டு யானைகள்

59பார்த்தது
வாழைகளை சேதம் செய்த காட்டு யானைகள்
தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில், செங்கோட்டை, வடகரை, வாவா நகரம் ஆகிய பகுதிகளில் விவசாயிகள், மா பலா வாழை உள்ளிட்டவற்றை பயிர் செய்துள்ளனர்.

இந்த நிலையில் சுடலைமுத்து என்பவரது வயலில் புகுந்த காட்டு யானை கூட்டங்கள், சுமார் 300க்கும் மேற்பட்ட வாழை மரங்களை சேதப்படுத்தி சென்றுள்ளன.

இதனால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாக விவசாயி வருத்தம் தெரிவித்துள்ளார்.

வனத்துறையினர் வந்து சுற்றுத் திரியும் காட்டு யானைகளை விரட்ட வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி