சங்கரன்கோவில் த, வெ, க கட்சி சார்பாக நீர் மோர் பந்தல் திறப்பு

77பார்த்தது
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழக வெற்றிக்கழக கட்சியின் சங்கரன்கோவில் தெற்கு ஒன்றிய செயலாளர் கனகராஜ் மற்றும் துணை செயலாளர் சக்திவேல் ஏற்பாட்டில் சங்கரன்கோவிலில் வெயில் தாக்கம் அதிகரித்ததால் மக்கள் சூட்டை தணிக்க நீர் மோர் பந்தல் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் தமிழக வெற்றி கழகம் கட்சியில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் மாரியப்பன் தலைமை வகித்தார். இதில் நிகழ்வில் சங்கரன்கோவில் நகர செயலாளர் சுப்பிரமணியன், மாவட்ட இணைச செயலாளர் சூர்யா (எ) அகல்யா, மாணவரணி அமைப்பாளர் ஹமீது பீர், தொண்டரணி அமைப்பாளர் பிரவீன், தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் சங்கரமகாலிங்கம், நெசவாளர் அணி அமைப்பாளர் பழனி உள்ளிட்ட ஏராளமானூர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி