வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றிய ஜவகர் நடுநிலைப்பள்ளி பள்ளியில் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கூட்டம் இன்று நடந்தது.
இதில் வட்டார கல்வி அலுவலர்கள் மாரியப்பன், இராமச்சந்திரன் மற்றும் சுபாக்ஷினி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார கல்வி அலுவலர் மாரியப்பன் பள்ளியின் இரண்டாம் பருவ மதிப்பெண் பதிவேற்றம் செய்தல், விடுமுறை நாட்களில் செயல்படுத்தும் செயல்பாடுகள் குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது. மேலும் BSNL ரசீது செயலில் பதிவேற்ற செய்வது பற்றி விளக்கம் தரப்பட்டது.
இந்நிகழ்வில் சுப்பையாபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் முருகேசன் மற்றும் இல்லம் தேடி கல்வியில் பணியாற்றும் முத்துலட்சுமிக்கு வாசிப்பு பழக்கத்தை ஊக்கப்படுத்தும் விதமாகவும், 1330 குறள் பாக்களை எழுதுதல் பிரிவில் பாராட்டி சான்றிதழ் வழங்கப்பட்டது. இறுதியில் இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் அலிசா நன்றி கூறினார்.