தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயணர் கோயிலில் சுப்பிரமணிய சுவாமி சன்னதியில் ஆறுமுகங்களைக் கொண்ட முருகப்பெருமானுக்கு ஆறு பெரிய தீபராதனைகள் செய்யப்பட்டு வைகாசி விசாகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிகள் ஆறுமுக சுப்பிரமணியனுக்கு 32 வகையான திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகங்களும் அலங்காரங்களும் தீபாரதனையும் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.