தென்காசி: ரயில் மறியலில் ஈடுபட முயன்ற வி, சி, க கட்சியினர் கைது

73பார்த்தது
சட்ட மாமேதை அம்பேத்கரை மத்திய அமைச்சர் அமித்ஷா அவமதித்ததாக கூறி, மத்திய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் ரயில் மறியலில் ஈடுபட முயன்றனர். 

ரயில் மறியலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, ஆதித்தமிழர் பேரவை, ஐந்திணை மக்கள் கட்சி ஆகிய கட்சியினர் ஈடுபட முயன்றனர். இந்த போராட்டத்தில் தென்காசி வடக்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் லிங்கவளவன், குருவிகுளம் ஒன்றிய செயலாளர் கனியமுத்து, திருவேங்கடம் நகரச் செயலாளர் சிவக்குமார், சங்கரன்கோவில் நகர செயலாளர் சுந்தர், வழக்கறிஞர்கள் ஜெயக்குமார், சிவராமன், ஆதித்தமிழர் பேரவை தென்காசி வடக்கு மாவட்டத் தலைவர் தென்னரசு, ஐந்திணை மக்கள் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ் விருதுநகர் மாவட்டத் தலைவர் மாடசாமி, செயலாளர் கோபாலகிருஷ்ணன், பொருளாளர் குருவையா உள்பட ஏராளமானோர் ரயில் மறியலில் ஈடுபட முயன்றனர். 

ரயில் மறியலில் ஈடுபட முயன்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.

தொடர்புடைய செய்தி