கனமழை தண்ணீர் சாலையில் தேங்கியதால் போக்குவரத்து பாதிப்பு

58பார்த்தது
தென்காசி மாவட்டம் திருவேங்கடம்-குருவிகுளம் பிரதான சாலையில் திருவேங்கடம் பகுதியில் நேற்று இரவு கனமழையால் தண்ணீர் குளம்போல் சாலையில் தேங்கியது.

இதனால் இன்று பகல் முழுக்க இந்த வழித்தடத்தில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

இதில் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் ஊர்ந்து சென்றன. அந்த வழியாக நடந்து செல்லும் பொதுமக்களும் முற்றிலும் பாதிக்கப்பட்டனர்.

உடனே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வந்து பார்வையிட்டு தேங்கி நிற்கின்ற தண்ணீரை அப்புறப்படுத்தி சாலைகளை சீர்படுத்த வேண்டும் என பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை வைத்தனர்.

தொடர்புடைய செய்தி