தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் திருவேங்கடம் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 100 ஏக்கரில் பூக்கள் மட்டுமே விவசாயம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் சங்கரன்கோவில் மலர் சந்தைக்கு இன்று பூக்கள் வரத்து குறைந்துள்ளதால் இன்று ஒரு மல்லிகை ரூ. 2500 முதல் ரூ. 3000 வரை விற்பனையாகிறது.
கனகாம்பரம் ரூ. 1000க்கும், பிச்சிப்பூ ரூ. 1500க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மல்லிகைப்பூ விளைச்சல் குறைந்ததால் வரத்து குறைந்தபோதும் பூக்களுக்கு நல்ல விலை கிடைப்பதால் நாளை திருமண நாட்கள் என்பதால் பூக்கள் விலை கடும் உயர்ந்துள்ளதால் வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.