தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சிக்கு உட்பட்ட சாலைகள் எதுவும் முறையாக பராமரிப்பு செய்யப்படாமல் குண்டும், குழியுமாக காட்சி அளித்து வருகிறது.
இதே போன்று சங்கரன்கோவில் நகராட்சி முக்கிய சாலையான பாரதியார் 4ம் தெருவில் குண்டு குழியுமாக இருந்த சாலையில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் நீர் நிரம்பிய சாலையில் அப்பகுதிகளை சேர்ந்த வாத்துகள் குளித்து மகிழும் காட்சி சமூக வலைதலங்களில் வைரலாகி வருகிறது.
இதனால் அப்பகுதியில் செல்லக்கூடிய வாகன ஓட்டிகள் சாலையை கடக்க முடியாமல் தவித்து வருகின்றனர். உடனே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வந்து பார்வையிட்டு சாலையை சரி செய்ய வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்தனர்.